Sunday, 28 July 2013

 ஸ்ரீ அன்னையும் நம் பிரார்த்தனைகளும்

அன்னையின் பக்தர்கள் அனைவரும் அடிக்கடி கூறும் வார்த்தைகள்

 

 " அன்னையால் மட்டுமே இது நடந்தது. அன்னையின் அருள் அற்புதங்களை எங்கள் வாழ்வில் நடத்தியது."
 

கருணை வடிவான நம் அன்னையிடம் செய்யப்பட்ட நம் நேர்மையான பிரார்த்தனைகள் ஒரு போதும் பலிக்காமல் இருந்ததில்லை. நமது பிரார்த்தனைகள் பலிக்கவில்லை என்றால் நமது வாழ்வியல் சூழலில் அன்னையின் அருள் செயல்பட தடைகள் ஏதாவது உள்ளதா என்று கவனித்து அதை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்  

* நம் அன்றாட வாழ்வில் செய்யும் காரியங்கள் அனைத்தையும்    ஈடுபாட்டுடன் அன்னையின் வழிபாடாக நேர்த்தியாக செய்ய வேண்டும்.
 

* நம் மனதின் கோபம், பொறாமை, வெறுப்பு , கவலை ஆகியவை அன்னை நம்மிடம் வர தடைகளாய் இருப்பவை. அனைத்தையும் நீக்கிவிட்டு அன்னையின் நினைவே பிரார்த்தனையாய்  கொண்டு செயல்பட வேண்டும்.
 

*பிரச்சனைகள் நினைவு வரும் பொழுதெல்லாம் அன்னையிடம் அதை சமர்ப்பித்துவிட்டு அன்னை நமக்கு நல்லதே தருவார் என்ற கருத்தை மனதில் ஆழமாக பதித்து கொள்ள வேண்டும்.
 

இவ்வாறு நம்மிடம் நாம் செய்யும் மாற்றங்கள் அன்னையின்அருளை நாம் பெற தகுதியானவர்களாக நம்மை மாற்றி நாமும் அன்னையிடம் செய்யப்பட பிரார்த்தனைகள் ஒரு பொழுதும் பலிக்காமல் இருந்ததில்லை என்று கூறுமாறு செய்து விடும்.

No comments:

Post a Comment